”வா தலைவா”: விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து வெளியான தகவல்!

”வா தலைவா”: விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து வெளியான தகவல்!
  • PublishedApril 6, 2023

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோவாக தற்போது தளபதி விஜய் இருக்கிறார். சினிமாவை தாண்டி விஜய்க்கு அரசியலில் சாதிக்க வேண்டும் என்பதும் விருப்பமாக இருக்கிறது.

ஆனால் இதுவரையிலும் தன்னுடைய நேரடியான பங்கு எதையும் அவர் அரசியலில் செய்யவில்லை. இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய நிர்வாகிகளை வைத்து ஆழம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

அந்தவகையில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அவர் அடிப்போட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆடியோ லாஞ்ச் உள்ளிட்ட விடயங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்பதுதான் இரசிகர்களின் ஆர்வமாக உள்ளது.

முக்கிய அரசியல்வாதி விஜய் உடன் இருக்கிறார் என்றும் அவர் அடுத்தடுத்து என்ன செய்யலாம் என்பதை விஜய்க்கு அறிவுறுத்தி வருவதாகவும் கூட செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வருடங்கள் இருப்பதால் அதற்குள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை விஜய் திட்டமிட்டு வருகிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *