அஜித்துடன் நடிக்கும் போது மூளையை வீட்டிலேயே வைத்துவிடுவேன் : சர்ச்சையை கிளப்பிய வில்லன் நடிகர்!

அஜித்துடன் நடிக்கும் போது மூளையை வீட்டிலேயே வைத்துவிடுவேன் : சர்ச்சையை கிளப்பிய வில்லன் நடிகர்!
  • PublishedApril 6, 2023

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிக்கும் அஜித் மற்றும் விஜயுடன் நடிப்பதில் பலர் போட்டிபோட்டு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அப்படி இருக்கையில் பிரபல வில்லன் நடிகர் ஒருவர் அஜித் குறித்து தெரிவித்துள்ள ஒரு கருத்து இரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

வட இந்திய சினிமாவில் இருந்து தென்னிந்திய சினிமாவிற்கு வில்லனாக வந்தவர்தான் நடிகர் ராகுல் தேவ். இவர் கேப்டன் விஜயகாந்த் நடித்த நரசிம்மா,  ராகவா லாரன்ஸ்ஸின் முனி,  நடிகர் அஜித்தின் வேதாளம் போன்ற படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். கடைசியாக லெஜன்ட் படத்தில் இவர் வில்லனாக நடித்தார்.

இந்திய சினிமாவின் பிரபல நடிகராக இருக்கும் இவர் அண்மையில் அளித்த பேட்டியொன்றில்,  நான் நன்றாக படித்த குடும்ப பின்னணியில் இருந்து வந்தவன். தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்ட படங்களில் நடிக்கும் பொழுது என்னுடைய மூளை மற்றும் புத்திசாலித்தனத்தை வீட்டில் வைத்துவிட்டு தான் வந்து நடிப்பேன் என்றும் சொல்லி இருக்கிறார்.

மேலும் தென்னிந்திய சினிமாக்கள் இன்னும் பழைய டெம்ப்ளேட்டுகளை பயன்படுத்தி வருகின்றன எனவும்  இரண்டு பேர் சண்டையிடும் பொழுது யாராவது சட்டையை கழட்டி தங்களுடைய உடம்பை காட்டுவார்கள் இதுதான் தென்னிந்திய சினிமாவில் நடக்கிறது. ஜிம் பாடியான என்னை வலுவே இல்லாத ஹீரோ அடிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதை சகித்து தான் நடித்த ஆக வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

இந்த விடயம் இரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *