அடுத்த ஐந்து வருடத்திற்கு லோகேஷை யாரும் நெருங்க முடியாது!

அடுத்த ஐந்து வருடத்திற்கு லோகேஷை யாரும் நெருங்க முடியாது!
  • PublishedApril 6, 2023

தற்போது டாப் நடிகர்களால் தேடப்படும் ஒரு இயக்குனர் தான் லேகேஷ் கனகராஜ்.  இந்நிலையில் அடுத்த 5 வருடங்களுக்கு லோகேஷ் கைவசம் நிறைய படங்கள் உள்ளது. அந்த படங்கள் குறித்து இந்த பதவில் பார்க்கலாம்.

லியோ : மாஸ்டர் என்ற மாபெரும் வெற்றி படத்திற்கு பிறகு தளபதி விஜய் மற்றும் லோகேஷ் இணைந்துள்ள படம் லியோ. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.

தலைவர் 171 : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தானாகவே முன்வந்து லோகேஷ் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் ரஜினிகாந்தின் கடைசி படம் லோகேஷின் படமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

கைதி 2 : கார்த்தியின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக கைதி படம் அமைந்தது.  இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் 2 : உலக நாயகன் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்த படம் விக்ரம். மீண்டும் இதே கூட்டணியில் விக்ரம் 2 படம் உருவாக இருக்கிறது.

ரோலக்ஸ் : லோகேஷின் விக்ரம் படத்தில் சூர்யாவின் 5 நிமிட ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்களை பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. இத்தனை வருட திரை வாழ்க்கையில் சூர்யா முதன்முதலாக வில்லனாக விக்ரம் படத்தில் நடித்திருந்தார். இப்போது ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து முழு படத்தையும் லோகேஷ் எடுக்க இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *