“ஜெயிலர் வசூலை ‘லியோ’ பீட் செய்து விட்டால் மீசையை எடுத்து கொள்கிறேன்” மீண்டும் சர்ச்சை
விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘லியோ’ படம் சக்கை போடு போட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்த இப்படம் லவையான விமர்சனங்கள் வந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் எந்த தொய்வும் இல்லாமல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது ‘லியோ’.
இப்படம் வெளியாவதற்கு முன்பாக பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பியது. அந்த வகையில் நடிகர் மீசை ராஜேந்திரன் ‘லியோ’ ரிலீசுக்கு முன்பாக அளித்த பேட்டி ஒன்றில், ‘லியோ’ பட வசூல் கண்டிப்பாக ஜெயிலரை முந்தாது. நான் ஒரு லட்சம் பந்தயம் வைக்கிறேன். ஜெயிலர் வசூலை லியோ முந்தினால் என் மீசையை எடுத்து கொள்கிறேன்.
இவ்வாறு பேசியிருந்தார் மீசை ராஜேந்திரன். அவரின் இந்த பேட்டி விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ராஜேந்திரனின் இந்த பேச்சை எல்லாம் ஓரம் வைத்து விட்டு தற்போது ‘லியோ’ பட கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில் தற்போது மீண்டும் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் மீசை ராஜேந்திரனிடம், நேர்காணல் ஆரம்பிக்கும் போதே ட்ரிம்மர் மிசினை கொண்டு வந்து காண்பித்து தக் லைப் செய்து விட்டார் தொகுப்பாளர்.
அதனை தொடர்ந்து பேசிய ராஜேந்திரன்,
விஜய் சூப்பராக நடித்து விட்டார். ஆனால் எனக்கு படம் பிடிக்கவில்லை. ‘லியோ’ மொத ஆயிரம் வசூலிக்கட்டும். அதை விஜய் சாரே அவர் வாயலாயே சொல்லட்டும். நான் மொத ஆள அவர் கால்ல போய் விழுந்துறேன்.
ஜெயிலர் வசூலை லியோ முந்தாது. ஐந்து நாள் கழிச்சு ரெண்டு வசூலையும் கம்பேர் பண்ணி என்கிட்ட வந்து கேளுங்க. இதே இடத்துல நான் வந்து பேசுறேன். 2.0 டிஜிட்டல் ரைட்ஸ் எல்லாம் சேர்த்து ஆயிரம் கோடி வரை வசூலித்தது. ஜெயிலரும் அதே போல் கலெக்ட் செய்தது. அந்த வசூலை ‘லியோ’ தொடாது. ஒருவேளை ஜெயிலர் வசூலை ‘லியோ’ பீட் செய்து விட்டால் நான் என் மீசையை எடுத்து கொள்கிறேன் என மறுபடியும் தற்போதை பேட்டியில் சவால் விட்டுள்ளார் ராஜேந்திரன்.