உள்ளாடையை களட்டி காட்டினால் தான் வாய்ப்பு : விஜய் பட நடிகைக்கு நேர்ந்த கொடுமை!

உள்ளாடையை களட்டி காட்டினால் தான் வாய்ப்பு : விஜய் பட நடிகைக்கு நேர்ந்த கொடுமை!
  • PublishedMay 25, 2023

நடிகர் விஜய் நடிப்பில் 2002ல் வெளியான தமிழன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இதனையடுத்து தமிழ் படங்களில் நடிக்காத அவர், பொலிவுட்டில் மிகப் பெரிய நட்சத்திரமானார்.

தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் ஹாலிவுட் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் ஹாலிவுட் வெப் தொடரான சிட்டாடெல் படத்தில் படுகவர்ச்சியாகவும் போல்ட்டான பெண்ணாகவும் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார்.

இந்நிலையில், பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டியொன்றில்  2002 – 2003 காலக்கட்டத்தில் தான் நடித்த போது ஒரு இயக்குனரில் செயல் வேதனை அடைந்தது பற்றி பகிர்ந்துள்ளார்.

அப்போது பொலிவுட் படம் ஒன்றில் ரகசிய ஏஜெண்ட் ரோலில் நடித்திருந்ததாகவும் ஆண் ஒருவரை வசியம் செய்யும் காட்சி படமாக்கட்டதாவும்,  அதில் நடிகருடன் நெருக்கமாக நடிக்கவும் ஒப்புக்கொண்டதாக கூறினார்.

அப்படத்தின் இயக்குனர் என்னை உள்ளாடையுடன் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் என் ஸ்டைலிஸ்-ஐ அழைத்து ஆடையை கழட்டி உள்ளாடையை காட்டச்சொன்னதாகவும் அதை பார்த்து தான் ரசிகர்கள் ஆசைப்படுவதாகவும் இயக்குனர் கொச்சையாக பேசியதாக கூறினாராம்.

உள்ளாடையுடன் நடிக்க மறுத்த பிரியங்கா  2 நாட்கள் நடித்த நிலையில் உன் படத்தில் நடிக்க முடியாது என்று கூறி விலகியிருக்கிறார். இந்த சம்பவம் அந்த இயக்குனரின் செயல் தனக்கு மனிதாபிமானமற்றதாக தெரிந்ததால் தனது வேதனை 20 ஆண்டுகள் கழித்து பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *