என் பங்கு எங்க? GBU பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா

என் பங்கு எங்க? GBU பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா
  • PublishedApril 15, 2025

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த வாரம் குட் பேட் அக்லி வெளியானது. முழு எண்டர்டெயின்மென்ட் ஸ்டைலில் இருந்த அப்படம் தற்போது அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதைத்தான் எதிர்பார்த்தோம் என அஜித் ரசிகர்களும் தியேட்டரில் அலப்பறை கொடுத்து வருகின்றனர். படம் வெளியாகி சில நாட்கள் கழிந்த பிறகும் கூட ஆரவாரம் குறையவில்லை.

அதன்படி தற்போது வரை இப்படம் 175 கோடிகளை வசூலித்துள்ளது. விரைவில் 200 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எல்லாம் பாடல்கள் ராயல்டி விவகாரம் தான்.

குட் பேட் அக்லி படத்தின் மிகப்பெரும் வெற்றிக்கு காரணம் அதில் இடம்பெற்று இருந்த பழைய பாடல்கள் தான். அதுதான் ஒட்டுமொத்த பேரையும் ஆட்டம் போட வைத்துக் கொண்டிருக்கிறது.

அதில் இளையராஜாவின் பாடல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒத்த ரூபா தாரேன், இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்ச குருவி ஆகிய பாடல்களை அனுமதி இன்றி உபயோகப்படுத்தி இருக்கின்றனர்.

இதனால் தனக்கு ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். சிறிது நாட்கள் இந்த ராயல்டி சர்ச்சை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் தொடங்கி இருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *