” எனக்கு பொறாம எல்லாம் இல்ல, லைட்டா பொறாமதான் ” : குமுறும் மீசை ராஜேந்திரன்!
நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால், சினிமா வாய்ப்பு பெற்று சப்போர்ட்டிங் ஆக்டர் ஆக வலம் வருபவர் தான் மீசை ராஜேந்திரன். இவர் சமீப காலமாக தன்னோடு வேலை பார்த்த சக நடிகரின் முன்னேற்றத்தை குறித்து கூறிவரும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதாவது நடிகர் சூரி அண்மையில், விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. சூரி நாயகனாகியது பற்றிதான் மீசை ராஜேந்திரன் குமுறி வருகிறார்.
அதுவும் எனக்கு பின்னாடி நடிக்க வந்த அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பா எனவும் மேலும் தன்னைவிட பேமெண்ட் கம்மியாக வாங்கிக் கொண்டிருந்தார் எனவும் கூறினார்
மேலும் அப்பொழுது எனக்கு அசிஸ்டன்ட் இருந்ததாகவும் அவருக்கு அசிஸ்டன்ட் இல்லாத நிலை இருந்தார். ஆனால் தற்பொழுது 10 வருடத்திற்கு பிறகு அப்படியே உல்டாவாக மாறிவிட்டது.
இன்றும் படப்பிடிப்பிற்கு நான் பஸ்ஸில் போவது வழக்கமாக இருக்கும் நிலையில் ஒருநாள் அவரின் அசிஸ்டன்ட் இடம் சூரியைப் பற்றி கேட்டபோது அவர் பிளைட்டில் வருவார் எனவும் கூறியதாக சொல்லி மன வருத்தமடைந்தார்.
மேலும் எங்கேயோ ஒரு இடத்தில் நமக்கு மைனஸ் ஆகிறது என தெரிந்து தற்பொழுது அதை மாற்றிக் கொள்ளும் நிலைமையில் இருப்பதாக மனம் உருகி பேசி வருகிறார்.