“நாயகன் மீண்டும் வந்தான்” இந்தியன் 2 திரைப்படத்தின் டப்பிங்

“நாயகன் மீண்டும் வந்தான்” இந்தியன் 2 திரைப்படத்தின் டப்பிங்
  • PublishedOctober 9, 2023

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் டப்பிங் செய்யும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் , பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை மிகுந்த பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, லைகாவுடனான பிரச்சனை போன்றவற்றால் இந்தியன் 2 படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து லைகாவுடனான பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டதை அடுத்து, இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பான நடந்து வருகிறது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவில், பல்லாயிரம் அடி உயரத்திலான விமான சாகசக் காட்சிகள் உள்ளிட்ட ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன.

தென்னாப்பிரிக்காவில் சுமார் 12நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இந்தியன் 2 திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தன்று வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2 படக்குழு கமல் டப்பிங் செய்யும் வீடியோவை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதில் கமல் மற்றும் ஷங்கர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *