“இந்தியன் 2 தாத்தாவிற்கு 106 வயசாச்சே” பகிரங்கமாக கேட்ட நபர்… பதிலடி கொடுத்தார் ஷங்கர்
இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனின் சேனாபதி கதாபாத்திரத்திற்கு இப்போது, 106 ஆகிறதே.
அவரால், எப்படி பறந்து பறந்து சண்டை போட முடியும், லாஜிக் இடிக்கிறதே என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கேள்விக்கு விளக்கம் கொடுத்த ஷங்கர், சுயஒழுக்கத்துடன் சரியான உணவு, யோகா, தியானம் என அனைத்தையும் சரியாகச் செய்தால் ஒருவருக்கு வயது ஒரு விஷயமே கிடையாது என்றார்.
1996ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் இந்தியன்.
தற்போது உருவாகியிருக்கும் இந்தியன் 2 படத்தின் மிரட்டலான டிரைலர் படத்தின் மீதான எதிர்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த விழாவில், செய்தியாளர் ஒருவர். இந்தியன் முதல் பாகத்திலேயே சேனாபதி 1918 பிறந்தவராக காட்டப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் இந்தியன் 2 படத்தில் அவருக்கு வயது 106ஆக இருக்கும், அப்படி இருக்கும் போது அவரால் எப்படி பறந்து பறந்து சண்டை போட முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த ஷங்கர், சீனாவில் தற்காப்பு கலையில் சிறந்த மாஸ்டரான லீ சிங் யுவான் என்பவர் 120 வயதிலும் பறந்து பறந்து சண்டை போடுவார். அவரை போலவே சேனாபதியும் வர்மக்கலையில் கைதேர்ந்தவர்.
சுய ஒழுக்கத்துடன் சரியான உணவு, யோகா, தியானம் போன்றவற்றை அனைவரும் கடைபிடித்தால் வயது ஒரு விஷயமே இல்லை என கூறி பத்திரிக்கையாளரை வியப்பில் ஆழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து மற்றொரு செய்தியாளர் இந்திய நான்காம் பாகம், ஐந்தாம் பாகம் வருமா என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த கமல், இந்த கேள்வியை நீங்கள் கேட்கும்போதே எனக்கு பதறுகிறது, தயவு செய்து அந்த கேள்வியை இப்போது கேட்க வேண்டாம்.
இந்தியன் முதல் பாகம் எடுக்கும் போது, நான் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று நான் ஷங்கரிடம் கூறினேன். அப்போது அவர் பதறினார். இப்போது நான் பதறுகிறேன். முதலில் இந்த படத்தை பாருங்க, இதற்கு அடுத்து வரும் படத்தையும் வெற்றிப்படமாக்குங்கள். அதன்பிறகு எங்களுக்கு தெம்பு இருந்தால், உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், அது எல்லாம் நடக்கலாம் என்று பதில் அளித்தார் கமல்.