லியோ வெற்றி விழாவில் கலந்துகொள்ளாமல் அனிருத் எங்கே சென்றார்?

லியோ வெற்றி விழாவில் கலந்துகொள்ளாமல் அனிருத் எங்கே சென்றார்?
  • PublishedNovember 2, 2023

லியோ வெற்றி விழாவில் அனிருத் எதனால் பங்கேற்கவில்லை என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்க லலிதகுமார் தயாரித்திருந்தார்.

இப்படம் இதுவரை 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

சூழல் இப்படி இருக்க லியோ படத்தின் சக்சஸ் மீட் நேற்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இப்படி லியோ படத்தின் வெற்றி விழா பல விஷயங்களால் கொண்டாடப்பட்டது. இருந்தாலும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒருவரான அனிருத் இந்த விழாவில் பங்கேற்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில் அதுகுறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அனிருத் ஜவான் படத்திற்கு இசையமைத்ததிலிருந்து இந்திய அளவில் பிரபலமான இசையமைப்பாளராக மாறிவிட்டார்.

அவரது கைவசம் தற்போது ஏராளமான படங்கள் இருப்பதாலும் அந்த பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்பதால் இந்த விழாவில் அவரால் கலந்த்கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *