GBU படத்தின் இதுவரை விற்பனை ஆகியுள்ள டிக்கெட்ஸ் குறித்து தகவல்

GBU படத்தின் இதுவரை விற்பனை ஆகியுள்ள டிக்கெட்ஸ் குறித்து தகவல்
  • PublishedApril 15, 2025

கடந்த வாரம் வெளிவந்து வசூலில் அமர்க்களம் செய்து வருகிறது அஜித்தின் குட் பேட் அக்லி.

ரொம்ப நாட்களுக்கு பிறகு அஜித்தை இப்படி பார்க்கிறோம், மிகவும் மகிழ்ச்சி, செம மாஸா இருக்காரு என ரசிகர்கள் உச்சபட்ச மகிழ்ச்சியுடன் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

அதே சமயம் விமர்சகர்கள், குட் பேட் அக்லி குறித்து கலவையான விமர்சனங்களையும் முன் வைத்துள்ளனர். ஆனாலும் கூட உலகளவில் 4 நாட்களில் ரூ. 155 கோடிக்கும் மேல் வசூலை இப்படம் அள்ளியுள்ளது.

இந்த நிலையில், இன்று மதியம் வரை இப்படம் உலகளவில் செய்துள்ள டிக்கெட்ஸ் விற்பனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இதுவரை 35 லட்சம் டிக்கெட்ஸ் விற்பனை ஆகியுள்ளது. இனி வரும் நாட்களில் இந்த டிக்கெட்ஸ் விற்பனை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *