புலிக்கு பிறந்தது பூனையாகுமா? : மிரட்டும் துருவின் போஸ்டர்!
மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் முழுக்க முழுக்க துருவ் விக்ரமின் படத்தில் கவனம் செலுத்தப் போகிறாராம். படப்பிடிப்பு வேலைகள் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள போஸ்டர் ஒன்று சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. போஸ்டரை பார்க்கும் பொழுதே துருவ் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் என தெரிகிறது.
தமிழக கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை கதை படமாக போகிறது என்று உறுதியாக இருக்கும் நிலையில் படத்தின் அடுத்த கட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தான் தெரிவிக்க வேண்டும்.
சீயான் விக்ரமிற்கு பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் கிடைத்தது போல், தற்போது அவருடைய மகன் துருவிற்கு இந்த படம் கிடைத்திருக்கிறது.