GBU படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகை இவரா??

அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படம் உலகளவில் வசூல் பட்டையை கிளப்பி வருகிறது.
வெறித்தனமான மாஸ் காட்சிகள், ரெட்ரோ பாடல்கள், அஜித்தின் ரெஃபரென்ஸ் என தரமான சம்பவம் செய்திருந்தார் ஆதிக். குறிப்பாக ரெட்ரோ பாடல்கள் ரசிகர்களால் திரையரங்கில் கொண்டாடப்பட்டது. சிம்ரனின் சுல்தானா பாடலுக்கு பிரியா வாரியர் மற்றும் அர்ஜுன் தாஸ் நடனமாடி இருந்தார்கள்.
இவர்களின் நடனத்திற்கு பின் இந்த பாடல் தான் தற்போது எந்த பக்கம் திரும்பினாலும் சமூக வலைத்தளங்களில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. மேலும் இந்த படத்தில் நடித்ததன் மூலம் நடிகை பிரியா வாரியருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகை பிரியா வாரியர் கிடையாது. சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா தான். ஆம், தென்னிந்திய சினிமாவில் நடனத்தில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீலீலா தான் குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்துள்ளார்.
ஆனால், சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக, அதன்பின் பிரியா வாரியர் நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல் கூறப்படுகிறது.