அடங்காத அசுரன் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. சூப்பர் அப்டேட் கொடுத்தார் ஏ.ஆர். ரஹ்மான்

அடங்காத அசுரன் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. சூப்பர் அப்டேட் கொடுத்தார் ஏ.ஆர். ரஹ்மான்
  • PublishedMay 7, 2024

நடிகர் தனுஷ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ராயன். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏஆர் ரஹ்மான்.

படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் 9ம் தேதி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து இசைப்புயல் ஏஆர் ரகுமான் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் தெரிவித்த சூழலில், தற்போது இசைப்புயல் மீண்டும் புதிய போஸ்டருடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அடங்காத அசுரன் என்று இந்தப் பாடல் துவங்கவுள்ளதாக தற்போது ஏஆர் ரஹ்மான், தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார். மேலும் படம் ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவில் அவர் படத்தின் மிரட்டலான போஸ்டர் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். வடசென்னையை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது ராயன் படம். இந்த படத்தில் தனுஷுடன் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *