ஜெயிலர் வசூலைப் பார்த்து மிரண்டுபோன திரையுலகம்.. உலகளவில் ரஜினி செய்த சாதனை

ஜெயிலர் வசூலைப் பார்த்து மிரண்டுபோன திரையுலகம்.. உலகளவில் ரஜினி செய்த சாதனை
  • PublishedAugust 14, 2023

ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலிருந்து நான்காவது நாள் வரை எவ்வளவு வசூலை ஈட்டி இருக்கிறது என்பதற்கான புள்ளி விவரம் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கி கொண்டு இருக்கிறது.

இந்த படம் முதல் நான்கு நாட்களில் பாக்ஸ் ஆபிஸை மிரட்டும் அளவுக்கு வசூலை வாரி குவித்து இருக்கிறது. அதிலும் வார இறுதி நாட்கள் ஆன சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு வசூலை வாரி குவித்து இருக்கிறது.

ரிலீஸ் ஆன முதல் நாளில் 95.78 கோடியை ஜெயிலர் படம் வசூலித்து அனைவருக்கும் ஆட்டம் காட்டியது.

அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளில் 56.24 கோடியையும், மூன்றாவது நாளில் 68.51 கோடியையும் குவித்திருக்கிறது. அதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஆன நேற்று வீக் என்டில் மட்டும் 82.36 கோடியை உலகம் முழுவதும் ஜெயிலர் வசூலித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை நான்கு நாட்களில் மட்டும் ஜெயிலர் படம் 302.89 கோடியை உலகம் முழுவதிலும் இருந்தும் வசூலித்துள்ளது.

அடுத்தடுத்து ரிலீசாகும் டாப் நடிகர்களின் படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளிப் போடவும் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *