சூப்பர் ஸ்டார் கொடுத்த தரமான பதிலடி… படம் வந்தா எப்படி இருக்கும்?

சூப்பர் ஸ்டார் கொடுத்த தரமான பதிலடி… படம் வந்தா எப்படி இருக்கும்?
  • PublishedAugust 1, 2023

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர் ரஜினியின் படங்கள் சில வருடங்களாக பெரிய வசூலை தருவதில்லை என்று சிலர் பிரச்சாரம் செய்து வந்தனர்.

இவருக்கு வயதாகி விட்டது. இனி இவருக்கு படம் நடிக்க முடியாது. இவருக்கு இனி அப்பா, தாத்தா போன் றகதாப்பாத்திரங்கள் தான் சரியாக வரும் என்றும் கூறி வந்தனர்.

இவருடைய நடிப்பில் இறுதியாக வந்த அண்ணாத்த படத்திலும் இவரது குரலில் நடுக்கம் உள்ளது. வயதானது தெரிகின்றது. ஆகவே இவருக்கு இனி படம் சரிவராது என்றும் கமன்ட் செய்து வந்தனர்.

அதிலும் குறிப்பாக விஜய் நம்பர் 1, அஜித் நம்பர் 2, ரஜினி நம்பர் 3 என கூறி வந்தனர். ஆனால், ஜெய்லர் படம் இன்னும் ரிலிஸாக 9 நாட்கள் உள்ளது, அதற்குள் வெளிநாடுகளில் இப்படம் வசூல் வேட்டையை தொடங்கி விட்டதாம்.

ஆம், ஜெய்லர் படம் வெளிநாடுகளில் முன்பதிவிலேயே 1.1 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.

இதனால் ரஜினி மீண்டும் நம்பர் 1 என நிரூபித்து விட்டார் என்று அந்தது பல்டி அடித்துவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *