விஷால் குறித்து ஜெயம் ரவி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

விஷால் குறித்து ஜெயம் ரவி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
  • PublishedJanuary 10, 2025

நடிகர் விஷால் சமீபத்தில் கலந்து கொண்ட ‘மத கஜ ராஜா’ பட விழாவில், ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி உடல்நலம் குன்றி காணப்பட்டார்.

இந்நிலையில் தான் இவரைப் பற்றி, தற்போது அவருடைய நண்பர்களில் ஒருவரான ஜெயம் ரவி தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஷால், கடந்த 2012 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் நடித்து முடித்த காமெடி மற்றும் ஆக்ஷன் ஜார்னரில் உருவான ‘மத கஜ ராஜா’ திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்னர் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிக்க, சந்தானம் காமெடி ரோலில் நடித்துள்ளார். பட தயாரிப்பாளர்கள் சில பண ரீதியான பிரச்சனைகளை சந்தித்ததன் காரணமாக, இப்படம் ரிலீஸ் ஆகாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

விஷாலின் முகம் வீங்கி, உடல் இளைத்து, கை நடுக்கத்தோடு இருந்த இவரின் தோற்றம் அவரின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய நிலையில், பல ரசிகர்கள் விஷால் மீண்டும் பூரண நலம் பெற பல்வேறு கோவில்களில் பூஜை செய்து வருகிறார்கள். அதே போல் திரையுலக பிரபலங்களும் விஷாலுக்கு தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருந்தாலும், சமூக வலைத்தளத்தில் பல யூ டியூபர்கள் விஷாலின் இந்த நிலைமைக்கு காரணம் அவருக்கு இருந்த கெட்ட பழக்கம் தான் என் கூறி வருகிறார்கள். விஷாலை இந்த நிலைமைக்கு ஆளாகியவர் இயக்குனர் பாலா தான் என்கிற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

‘அவன் இவன்’ படத்தில் நடித்த போது மாறுகண் வேண்டும் என்பதற்காக, விஷாலின் கண்களை பாலா தைக்க கூறியதன் விளைவாக விஷாலுக்கு தீராத ஒற்றை தலைவலி ஏற்பட்டது. தலைவலியை மறக்க விஷால் சில தவறான பழக்கங்களுக்கு அடிமையானதாகவும் கூறப்பட்டன.

ஆனால் விஷால் தரப்பு முழுமையாக இதுபோன்ற தகவலை மறுத்துள்ள நிலையில், வைரல் காய்ச்சல் காரணமாகவே விஷால் இப்படி உள்ளதாகவும் கூறிய விரைவில் நலம் பெறுவார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய தன்னுடைய பேட்டி ஒன்றில்… விஷால் உடல்நிலை குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துளளார். விஷால் பற்றி அவர் கூறுகையில்

“விஷால் மறுபடியும் சிங்கம் போல் மீண்டு வருவான். விஷாலுக்கு இப்போது போதாத காலம். கெட்ட நேரம் என்று வேணா சொல்லலாம். ஆனால் விஷாலை விட ஒரு தைரியசாலி கிடையாது. அந்த தைரியம் அவனை காப்பாற்றும். அவன் நிறைய பேருக்கு உதவி செஞ்சிருக்கான். அவன் நல்ல மனசுக்கு அவன் சீக்கிரம் மறுபடியும் சிங்கம் மாதிரி வருவான் என கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *