அம்பானி இல்லத் திருமண விழாவில் WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா

அம்பானி இல்லத் திருமண விழாவில் WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா
  • PublishedJuly 12, 2024

மும்பையில் பிரமாண்டமாக நடைபெறும் அம்பானி இல்லத் திருமண விழாவில் WWE மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா கலந்துகொண்டுள்ளார்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சண்ட் தம்பதிகளின் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் ( Jio World Convention Centre) நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொள்வதற்காக ஹாலிவுட் நடிகரும், WWE மல்யுத்த வீரருமான ஜான்சீனா மும்பை வந்துள்ளார்.

விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருமணத்தில் கலந்துகொண்டுள்ள அவர் அணிந்திருந்த உடை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *