பாலிவுட்டிலிருந்து விலக இதுதான் காரணம்.. 27 வருடங்களுக்குப்பிற்கு ரீ-என்ட்ரி எதற்காக?

பாலிவுட்டிலிருந்து விலக இதுதான் காரணம்.. 27 வருடங்களுக்குப்பிற்கு ரீ-என்ட்ரி எதற்காக?
  • PublishedMay 10, 2024

நடிகை ஜோதிகா 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ஏராளாமான ஹிட் படங்களில் நடித்திருக்கும் அவர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பல வருடங்கள் கழித்து ஹிந்தியில் எண்ட்ரி கொடுத்தது குறித்து ஜோதிகா பேசியிருக்கிறார்.

ஜோதிகா இப்போது பாலிவுட்டில் கவனம் செலுத்திவருகிறார். அந்த வகையில் அவர் ஷைத்தான், ஸ்ரீகாந்த் ஆகிய ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார்.

பல வருடங்கள் கழித்து ஹிந்திக்கு ஜோ சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அதுகுறித்து பேசியிருக்கும் அவர், “இத்தனை வருடங்களில் ஹிந்தி படங்களிலிருந்து எனக்கு வாய்ப்பு வரவில்லை.

27 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய படங்களில் நடித்தேன். அதன் பிறகு தென்னிந்தியாவில் மட்டுமே வொர்க் செய்தேன்.

என்னுடைய முதல் படமே ஹிந்தி படம்தான். அது திரையரங்குகளில் சரியாக ஓடவில்லை. அது வழக்கமான ஃபார்முலாவில் இருந்தது. உங்களுக்கு சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்பு வேண்டுமென்றால் உங்களது முதல் படம் நன்றாக ஓட வேண்டும்.

நான் நடிக்க வந்தபோது பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுக்கென ஹீரோயின்களை செலக்ட் செய்துகொண்டு அவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்தார். நல்ல வேளை அப்போது தென்னிந்திய பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

தென்னிந்திய படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு பாலிவுட்டிலிருந்து விலகிவிட்டேன். நான் நடித்த ஹிந்தி படம் பெரிதாக வசூலிக்கவும் இல்லை. ஆனால் எனது நடிப்பு வரவேற்பை பெற்றது. இந்தி படங்களில் இருந்து எனக்கு ஒருமுறை கூட வாய்ப்பு வரவில்லை.

நான் 27 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய படங்களில் நடித்தேன். அதன் பிறகு தென்னிந்திய படங்களில் மட்டுமே பணியாற்றினேன். பாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருந்தன. பாலிவுட்டில் உள்ளவர்களும் நான் ஒரு தென்னிந்தியர் என்றேதான் நினைத்தார்கள். இனிமேல் நான் ஹிந்தி படங்களில் நடிக்கமாட்டேன் என்று முடிவு செய்தார்கள்.

தென்னிந்திய சினிமாக்களில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினேன். எனது திறமைக்கு நல்ல அங்கீகாரமும் கிடைத்தது. ஹிந்தி படத்தை நான் தவிர்த்தது இல்லை. இத்தனை வருடங்களாக எனக்கு ஏற்ற கதைகள் எதுவும் அமையவில்லை என்பதுதான் உண்மை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *