உங்கள் பாரம்பரியம் தான் என்ன?…கோபத்தின் உச்சத்தில் ஜோவிகா

உங்கள் பாரம்பரியம் தான் என்ன?…கோபத்தின் உச்சத்தில் ஜோவிகா
  • PublishedJune 28, 2025

நடிகர் விஜயகுமாரின் மகளாக தமிழ் சினிமாவில் நடிகையாக நடித்து பிரபலமான வனிதா விஜயகுமார், பிக்பாஸ், குக்வித் கோமாளில் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

தற்போது தன்னுடைய மகள் ஜோவிகா இயக்கத்தில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தில் ராபர்ட் மாஸ்டருடன் ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளில் ஜோவிகாவுடன் வனிதா கலந்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஆடையணிவது குறித்து வரும் தவறான கமெண்ட்ஸ்கள் பற்றி கோபத்தில் பதிலளித்துள்ளார். அதில், நான் ஜீன்ஸ் டிஷர்ட் போட்டால் பாரம்பரியமான உடையை அணியவில்லை என்று சொல்வார்கள்.

பாவாடை சட்டை போன்ற பாரம்பரியமான உடைகளை அணிந்தால் இந்த காலத்துக்கு தகுந்தபடி டிரெஸ் போடவில்லையா என்று சொல்வார்கள். உங்களுடைய பாரம்பரியம்தான் என்ன? உங்கள் பாரம்பரியத்தை முதலில் காண்பியுங்கள் என்று கூறியிருக்கிறார் ஜோவிகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *