பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி

பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி
  • PublishedFebruary 27, 2025

உலக அளவில் பிரபலமான பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம், உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடி உள்ளார்.

இவருடைய தந்தை ஒரு இசைக் கலைஞர் என்பதால், சிறு வயதிலேயே கே.ஜே.யேசுதாசுக்கும் இசை மீது ஆர்வம் ஏற்பட்டது. இதன் பின்னர், இந்துஸ்தானி இசையிலும் கை தேர்ந்தவராக மாறினார்.

1962 ஆம் ஆண்டு வெளியான மலையாள படமான ‘கால்பாடுகள்’ என்கிற திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார் யேசுதாஸ்.

தமிழில் கே ஜே யேசுதாஸ் ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ என்கிற படத்தில் பாடியிருந்தார். ஆனால் இந்த பாடல் வெளியாவதற்கு முன்னரே, ‘கொஞ்சம் குமரி’ படத்தில் இவர் பாடிய பாடல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இந்நிலையில் 85 வயதாகும் இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ரத்த அணுக்கள் தொடர்பான பிரச்சனை குறித்து தற்போது மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் யேசுதாஸ் கூடிய விரைவில் நலம் பெற வேண்டும் என தங்களுடைய, பிராத்தனைகள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

SONY DSC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *