Blockbuster-க்கு ஒரு புரோமோ வீடியோவா? மகிழ்ச்சியின் உச்சத்தில் கல்கி டீம்

Blockbuster-க்கு ஒரு புரோமோ வீடியோவா? மகிழ்ச்சியின் உச்சத்தில் கல்கி டீம்
  • PublishedJuly 13, 2024

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி, அன்னா பென் என பலர் நடிப்பில் கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான படம் கல்கி 2898ஏடி.

படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.

சுதந்திர தினத்தன்று பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் கல்கி 2898ஏடி திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

கல்கி 2898ஏடி திரைப்படம் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில் படத்தின் முழு வசூல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது படம் ரூ. 1000 கோடி வசூலை எட்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து புதிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் பிரபாஸ் மகாபார யுகத்தில் சூரிய புத்திரன் கர்ணனாக காட்டப்பட்ட வீடியோவுடன் இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *