அதிரடி காட்டும் அமிதாப் பச்சன்! மிட்டும் கமல்! ‘கல்கி 2898 ஏடி’ ரிலீஸ் ட்ரெய்லர்

அதிரடி காட்டும் அமிதாப் பச்சன்! மிட்டும் கமல்!  ‘கல்கி 2898 ஏடி’ ரிலீஸ் ட்ரெய்லர்
  • PublishedJune 21, 2024

பிரபாஸ் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் ரிலீஸ் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அடையாளமே தெரியாத கமலின் கெட்டப் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரமாண்டங்களுக்கு எந்த குறைவும் இல்லாமல், கோட்டைகள், கட்டிடங்கள், பறக்கும் வாகனங்கள், வித்தியாசமான உடைகள் என மேக்கிங் மிரட்டுகிறது. அமிதாப் பச்சன் – பிரபாஸ் இடையிலான சண்டை திகிலூட்டுகின்றன.

கமல்ஹாசனின் தோற்றம் ஆச்சரியம் அளிக்கிறது. பின்னணியில் சந்தோஷ் நாராயணனின் குரலில் பாடல் ஒலிக்க காட்சிகள் நகர்கிறது. ரிலீஸ் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

கல்கி 2898 ஏடி: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘கல்கி 2898’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *