kalki 2898 trailer… ஆண்டவரின் முகத்தில் இதை பார்த்தீர்களா?

kalki 2898 trailer… ஆண்டவரின் முகத்தில் இதை பார்த்தீர்களா?
  • PublishedJune 11, 2024

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி திரைப்படம் இந்த மாதம் ஜூன் 27-ஆம் தேதி வெளியாகிறது. அந்தப் படத்தின் அட்டகாசமான டிரெய்லர் நேற்று பல்வேறு மொழிகளில் வெளியானது.

கல்கி படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்த நிலையில், தற்போது டிரெய்லரில் இடம்பெற்றுள்ள அவரது காட்சியை பார்த்த ரசிகர்கள் அதனை கன்ஃபார்ம் செய்து விட்டனர்.

கல்கி படத்தின் முதல் பாகத்தில் கமல்ஹாசன் வெறும் 15 நிமிடக் காட்சிகளில் மட்டுமே வருவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கல்கி டிரெய்லரில் கமல்ஹாசன் மூச்சு விட்டு முட்டக்கண்ணை வைத்து முறைப்பது போலவும் ஒருவர் காதருகே வந்து “கவலைப்படாதே புது பிரபஞ்சம் ஒன்று உருவாகிறது” எனக் கூறும் காட்சி மட்டுமே இடம்பெற்றுள்ளது.

பிராஸ்தட்டிக் மேக்கப் போட்டு நடிக்க வேண்டும் என்றால் உடனடியாக கமல்ஹாசனை கூப்பிடுங்க என நாக் அஸ்வின் நினைத்து இருப்பார் போல, இந்தியன் 2 படத்தில் 90 வயது தாத்தாவாக கமல் நடித்துள்ள நிலையில், அதே போன்ற லுக்கில் கல்கி படத்தில் அவர் வந்து செல்கிறார்.

ஆனால் இதில் மனித தோற்றத்தை விட ஆண்டவரின் முகம் சற்று வித்தியாசமாக இருப்பதுடன், சற்று பயமுறுத்தும் தோற்றத்துடன்் தான் இருக்கின்றார் என்றால் மிகையாகாது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *