விரைவில் 1,000 கோடியை தொட்டுவிடும் கல்கி – முழு விபரம் இதோ…

விரைவில் 1,000 கோடியை தொட்டுவிடும் கல்கி – முழு விபரம் இதோ…
  • PublishedJuly 5, 2024

நாக் அஸ்வின் இயக்கத்தில், கடந்த 27-ஆம் தேதி வெளியான ‘கல்கி 2898 கிபி ‘ திரைப்படம், தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று வெளியான இப்படத்தில், பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி, பசுபதி, ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான இந்த திரைப்படம் ஒரே வாரத்தில் சுமார், 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை தமிழகத்தில் மட்டும் ‘கல்கி 2898 AD’ திரைப்படம் 28 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தியில் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைப்பதற்காக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் ‘கல்கி 2898 கிபி’ திரைப்படம் விரைவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டும் என திரையுலக வணிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *