விமர்சகர்களிடம் 25 கோடி கேட்டு கல்கி டீம் வழக்குப்பதிவு.. கதி கலங்கும் தமிழ விமர்சகர்கள்
நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த மாதம் இறுதியில் வெளியானது கல்கி 2898 ஏடி.
கல்கி 2898 ஏடி படத்தின் 2வது பாகம் வரும் 2026ம் ஆண்டில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கல்கி 2898 ஏடி படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்திற்கான வசூல் மழையில் குறை ஒன்றும் இல்லை. ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்த போதிலும் இந்த படத்தின் வசூல் எண்ணிக்கை மட்டும் குறையாமல் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படம் கலவையான விமர்சனங்களையும் பெற தவறவில்லை. தொடர்ந்து படத்தின் மீதான அவதூறுகளை பல சினிமா விமர்சகர்கள் தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் உள்ளனர். தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கல்கி 2898 ஏடி படம் இத்தகைய அவதூறுகளை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியில் சுமித் கடேல், ரோஹித் ஜெய்ஸ்வால் உள்ளிட்டவர்கள் மீது அவதூறு கருத்துக்களை பகிர்ந்ததாக கல்கி டீம் வழக்குப்பதிவு செய்துள்ளது.
கல்கி டீம் 1000 கோடி கிளப்பில் இணைந்த நிலையில், தவறான நம்பர்களை கூறுவதாக இவர்கள் தங்களது எக்ஸ் தள பக்கங்களில் அடுத்தடுத்த ட்வீட்களை பகிர்ந்திருந்தனர்.
இதையடுத்தே இதற்கான விளக்கம் கொடுக்க வேண்டும் அல்லது 25 கோடி ரூபாய் நஷ்டஈடாக கொடுக்க வேண்டும் என தயாரிப்பு தரப்பு வழக்குப் பதிந்துள்ளது. இதனிடையே, இது போன்ற வேலைகளை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட பலர் தமிழில் செய்து வருகின்றனர். அவர்கள் மீதும் படக் குழுவினர் வழக்குப் பதிவார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.