கல்கி-யுடன் விளையாடிய பிரபல விமர்சகர்களுக்கு பேரிடியாக வந்த செய்தி

கல்கி-யுடன் விளையாடிய பிரபல விமர்சகர்களுக்கு பேரிடியாக வந்த செய்தி
  • PublishedJuly 19, 2024

நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான கல்கி 2898 ஏடி பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜூன் 27 அன்று வெளியான இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. பாகுபலி, கேஜிஎஃப் 2 வரிசையில் கல்கி 2898 ஏடி படமும் 1000 கோடி கிளப்பில் இணைந்த தென்னிந்திய படமாக மாறி உள்ளது.

இந்திய சினிமாவை ஹாலிவுட் தரத்தை நோக்கி இந்த படம் கொண்டு சென்றுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர். தற்போது கல்கி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் கல்கி 2898 AD படத்தின் தயாரிப்பாளர்கள் “போலி” பாக்ஸ் ஆபிஸ் எண்களை வழங்கிய இரண்டு பேர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளனர். வர்த்தக ஆய்வாளர்களான சுமித் கேடல் மற்றும் ரோஹித் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு கல்கி படக்குழு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

சுமித் ஏற்கனவே சட்டப்பூர்வ நோட்டீஸைப் பெற்றுள்ள நிலையில், ஜூலை 20 அதாவது நாளைக்குள் ரோஹித் அதைப் பெறுவார் என்று கூறப்படுகிறது.

திரைத்துறையில் பிரபலமான விமர்சகர்களான இருவரும் வேண்டுமென்ற கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் குறித்து போலியான புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றனர் எனவும் இது குறித்து தொடர்ந்து தங்கள் சமூக வலைதள பக்கங்களில் ட்வீட் செய்து வருகின்றனர் என்றும் கல்கி படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் சுமித், ரோஹித் இருவரும் தங்கள் பாக்ஸ் ஆபிஸ் விவரங்களை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதை சமர்ப்பிக்க தவறினால் ரூ.25 கோடி அபராதமாக தயாரிப்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *