கமல்ஹாசன் – குஷ்பு – சுஹாசினி திடீர் சந்திப்பு

கமல்ஹாசன் – குஷ்பு – சுஹாசினி திடீர் சந்திப்பு
  • PublishedNovember 23, 2025

நடிகர் ரஜினியின் “தலைவர் 173” படத்தை கமல்ஹாசன் தயாரிக்க இருக்கிறார். அந்த படத்தை சுந்தர் சி இயக்க போவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு திடீரென அப்படத்திலிருந்து சுந்தர் சி விலகினார்.

இதையடுத்து புதிய இயக்குனர் யார் என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், சுந்தர் சியின் திடீர் விலகலுக்கு காரணம் என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில், கமல்ஹாசனும், குஷ்பூவும் கோவாவில் சந்தித்துக்கொண்டார்கள். இவர்களுடன் சுஹாசினியும் உடனிருந்தார்.

அப்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டார்கள். அந்த சமயத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இருவரும் எதிர்பாராத விதமாக சந்தித்துள்ளார்கள். இதற்கும் படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *