பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் கமல்ஹாசன்.. அதிரடியாக வெளியான அறிவிப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் கமல்ஹாசன்.. அதிரடியாக வெளியான அறிவிப்பு
  • PublishedAugust 6, 2024

பிக் பாஸ் சீசன் 8ஐ தொகுத்து வழங்கப்போவதில்லை என கமல்ஹாசன் அதிரடியாக தற்போது அறிவிப்பு ஒன்றை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.

கடந்த சீசனில் கமல்ஹாசன் மாயாவுக்கு ஃபேவரைட்டாக செயல்பட்டு வந்தார் என கடுமையான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் அதிகளவில் கமல்ஹாசன் மீது நெட்டிசன்கள் அடுக்கினர்.

கமல்ஹாசன் அடுத்த சீசனை தொகுத்து வழங்கக் கூடாது என்றும் கண்டனங்கள் கிளம்பின. ஆனாலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என அவரது ரசிகர்கள் உறுதியுடன் இருந்து வந்த நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

தக் லைஃப், கல்கி 2, இந்தியன் 3 என வரிசையாக கமல்ஹாசன் கைவசம் படங்கள் இருப்பதால், சினிமா ஷூட்டிங்கிற்காக தன்னால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் பங்கேற்க முடியவில்லை என்றும் பிக் பாஸ் ரசிகர்களுக்கும், போட்டியாளர்களுக்கு விஜய் டிவிக்கும் நன்றி என அறிக்கை ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *