பிக் பாஸுக்கு பாய் பாய்… ஆண்டவர் அதிரடி

பிக் பாஸுக்கு பாய் பாய்… ஆண்டவர் அதிரடி
  • PublishedDecember 13, 2023

பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆரம்பத்திலேயே இந்த நிகழ்ச்சிக்கு எதிராக பல சர்ச்சைகள் எழுந்தது. சில அரசியல் கட்சிகள் இந்த நிகழ்ச்சி நடத்தக்கூடாது என, போர் கொடி உயர்த்திய நிலையில், அனைத்து பிரச்சனைகளையும், சர்ச்சைகளையும், சாமர்த்தியமாக தன்னுடைய வார்த்தைகளால் சமாளித்து… வெற்றிகரமாக 7-ஆவது சீசன் வரை கொண்டு வந்த பெருமை,  உலக நாயகன் கமலஹாசனியே சேரும்.

கடந்த அக்டோபர் மாதம், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 8 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது. கடந்த 6 சீசன்களில் இல்லாத வகையில் 2 பிக்பாஸ் வீட்டுடன் துவங்கி, பரபரப்புக்கும் சண்டை – சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.

போட்டியாளர்கள் எண்ணிக்கை குறைந்த போது… அதிரடியாக 5 போட்டியாளர்களை வைல்ட் கார்டாக உள்ளே அனுப்பிய பிக்பாஸ்… பின்னர் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய…  இரண்டு போட்டியாளர்களை பூகம்பம் டாஸ்க் மூலம் உள்ளே அனுப்பினார்.

கடந்த வாரம்… மக்கள் பலர் மழை காரணமாக வாக்களிக்காத நிலையில்… எவிக்ஷன் இல்லை என அறிவிக்கப்பட்டது. எனவே இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் கடந்த ஆறு சீசன்களை விட, கமலஹாசன் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி போட்டியாளர்களிடம் பாரபட்சம் காட்டுவது, மட்டுமின்றி மக்கள் மனசாட்சியாக பேசாமல்… சுய லாபத்திற்காக பேசுகிறார் என்கிற விமர்சனங்கள் அதிகம் முன் வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமலஹாசன், இந்த சீசனோடு தொகுப்பாளர் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ள நிலையில்… அடுத்ததாக ஐந்து பிரபலங்களை விஜய் டிவி குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *