உடனடியாக விஜய் சேதுபதிக்கு phone போட்டார் கமலஹாசன்…

உடனடியாக விஜய் சேதுபதிக்கு phone போட்டார் கமலஹாசன்…
  • PublishedOctober 7, 2024

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மிகப்பிரம்மாண்டமான முறையில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக வலம் வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழிலும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டது.

ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது என்றே சொல்லலாம். நடிகர் கமல்ஹாசன் அவரது ஸ்டைலில் வேற லெவலில் பண்ணிக்கொண்டிருந்தார்.

கமல் தொகுத்து வழங்குகின்றார் என்றால் கண்டிப்பாக இந்நிகழ்ச்சியில் ஏதேனும் புதுமை இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க துவங்கினார்கள். முதல் சிசனிலேயே இந்நிகழ்ச்சி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இந்த முறை, அரசியல் மற்றும் சினிமா வேலைகளின் காரணமாக கமல் இந்த நிகழ்ச்சியில் இருந்து விளக்கினார். தொடர்ந்து விஜய் சேதுபதி கமிட் ஆனார். இதை கேள்வி பட்ட உடன், கமல் அவருக்கு போன் செய்து தன வாழ்த்துக்களை கூறியிருக்கின்றார்.

அதுமட்டுமல்லாமல் படங்களில் சிறப்பாக நடித்து அசத்துவது போல இந்நிகழ்ச்சியையும் சிறப்பாக தொகுத்து வழங்கவேண்டும். உங்களுக்கான தனி ஸ்டைலை இந்நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என விஜய் சேதுபதிக்கு சில அறிவுரைகளை கமல் கூறியதாக சொல்லப்படுகிறது.

அவர் சொன்னபடியே தற்போது அசாத்திக்கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால் இனிமே தானே ஆட்டமே ஆரம்பிக்க போகிறது. தாக்கு பிடிப்பாரா விஜய் சேதுபதி என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *