திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டர் கங்கை அமரன்

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டர் கங்கை அமரன்
  • PublishedJanuary 6, 2025

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் அறியப்படுபவர் கங்கை அமரன்.

இவர் இசைஞானி இளையராஜாவின் சகோதரர்.

ஒரு விடுகதை ஒரு தொடர்கதை என்கிற படத்தின் மூலம் 1979ஆம் ஆண்டு இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து திரைத்துறையில் பயணித்து வந்த இவர், கரகாட்டக்காரன் எனும் ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார்

இயக்குனராக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், பின்னணி பாடகராகவும் பன்முக திறமை கொண்டவராக விளங்கினார்.

இவருக்கு தற்போது 77 வயதாகிறது. இந்த நிலையில், சிவகங்கை சிற்றுவட்டாரப் பகுதிகளில் இவர் நடிக்கும் படத்தின் படபைடிப்பு நடந்துகொண்டிருந்தபோது, திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக கங்கை அமரன் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் கொடுக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *