சிவனுக்கு கண்களை கொடுத்த கண்ணப்பா… வசூல் விபரம் வெளியானது

சிவனுக்கு கண்களை கொடுத்த கண்ணப்பா… வசூல் விபரம் வெளியானது
  • PublishedJune 30, 2025

சிவபெருமானுக்கு கண்களை கொடுத்த கண்ணப்ப நாயனாரின் கதையை இயக்குனர் முகேஷ் குமார் சிங் படமாக எடுத்திருந்தார்.

இதில், கதாநாயகனாக விஷ்ணு மஞ்சு நடித்துள்ளார்.

மேலும் பிரபாஸ், மோகன்லால், ப்ரீத்தி முகுந்தன், மோகன் பாபு, சரத்குமார், அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கலக்கிக்கொண்டிருக்கும் இப்படம் 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 3 நாட்களில் உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது கண்ணப்பா திரைப்படம். இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் வரவேற்பு எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *