கார்த்தியின் 27 ஆவது படத்தின் டைட்டில் வெளியானது… கூட யாருனு பாருங்க

கார்த்தியின் 27 ஆவது படத்தின் டைட்டில் வெளியானது… கூட யாருனு பாருங்க
  • PublishedMay 24, 2024

கார்த்தி இப்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பாக அவர் நடித்த ஜப்பான் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

இந்நிலையில் அவருடைய அடுத்த பட அறிவிப்பும் தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் மெய்யழகன் தான் கார்த்தியின் 27 ஆவது படமாக உருவாக உள்ளது.

96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கும் இப்படத்தில் கார்த்தி உடன் அரவிந்த்சாமியும் இணைந்துள்ளார். இந்த போஸ்டரை தற்போது பட குழு வெளியிட்டுள்ளது.

தற்போது சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கை தயாரித்து வரும் சூர்யா விருமன் படத்தை தொடர்ந்து கார்த்தி உடன் மீண்டும் இணைந்துள்ளார். அதில் படத்தின் டைட்டில் தான் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இதற்கு முன்பாக சூர்யா, ஜோதிகா ஜோடியின் பேரழகன் அவர்களுக்கு ஹிட் படமாக அமைந்தது. அதை அடுத்து இந்த மெய்யழகன் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *