கவின் – நயன்தாரா படத்துக்கு ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக வைக்கப்பட்ட டைட்டில்

கவின் – நயன்தாரா படத்துக்கு ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக வைக்கப்பட்ட டைட்டில்
  • PublishedOctober 28, 2024

பிக்பாஸ் மூலம் கிடைத்த புகழை சரிவர பயன்படுத்திக் கொண்ட பிரபலங்களில் கவினும் ஒருவர்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். டைட்டில் ஜெயிக்கும் அளவுக்கு மவுசு இருந்தும் 5 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறினார் கவின்.

அந்நிகழ்ச்சிக்கு பின்னர் கவினுக்கு சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன. அதில் சரியான கதைகளை தேர்வு செய்து நடித்ததால் அவரது படங்களும் அடுத்தடுத்து வெற்றி பெற்றன.

தற்போது, பிளெடி பெக்கர் என்கிற படத்தில் நடித்துள்ளார். படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தை முடித்த கையோடு நடிகர் கவின் கைவசம் கிஸ், ஆண்ட்ரியா உடன் ஒரு படம், நயன்தாரா ஜோடியாக ஒரு படம் என லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.

இந்த நிலையில், கவின் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள படத்தின் டைட்டில் தற்போது இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஷ்ணு எடவன் என்பவர் தான் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ‘ஹாய்’ என இரண்டே எழுத்தில் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. விரைவில் இப்படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *