முதன்முறையாக விஜய் தேவரகொண்டா உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்

முதன்முறையாக விஜய் தேவரகொண்டா உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
  • PublishedSeptember 23, 2025

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘மகாநடி’ படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்திருந்தாலும், இருவரும் இணைந்து வரும் காட்சிகள் படத்தில் இல்லை. எனவே, இருவரின் ரசிகர்களுக்கும் இந்தப் புதிய படம் குறித்த அப்டேட் உற்சாகத்தை அளித்துள்ளது.

கிராமத்துப் பின்னணியில் உருவாகும் ஒரு ஆக்‌ஷன் டிராமா படமாக இது இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால், அதற்கு முன் ராகுல் சங்கிருத்யன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பை விஜய் தேவரகொண்டா முடிக்க வேண்டியுள்ளது.

மேலும், தெலுங்கு தவிர தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *