திருமணத்துக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் எடுத்த முடிவு அதிர்சி முடிவு?
கீர்த்தி சுரேஷ் கடந்த 12ஆம் தேதி ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரது திருமணமும் கோவாவில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இதில் விஜய், திரிஷா, டிடி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
சூழல் இப்படி இருக்க திருமணத்துக்கு பிறகு கீர்த்தி நடிப்பாரா இல்லையா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருந்த சூழலில் அதுகுறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
இதற்கிடையே கீர்த்தி சுரேஷ் கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார் என்று பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் முதலில் இவர்களது திருமணம் ஹிந்து முறைப்படி நடந்தது. அதனையடுத்து ஆண்டனி ஹிந்துவாக மதம் மாறிவிட்டாரோ என்றும் குரல்கள் எழுந்தன.
ஆனால் அதிலும் உண்மையில்லை. இரண்டு பேருக்கும் கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடந்தது. அப்போது கீர்த்தி சுரேஷும், ஆண்டனியும் லிப் லாக் செய்துகொண்ட புகைப்படங்களும் வெளியாகி பெரும் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திருமணம் செய்துகொண்ட கீர்த்தி சுரேஷ் நடிப்பை தொடர்வாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருந்தது.
அதன்படி திருமணத்துக்கு பிறகு நடிப்பை தொடர்வதில் கீர்த்திக்கு விருப்பம் இல்லை என்றும் பட தயாரிப்புகள், கணவர் ஆண்டனியின் தொழில்களை கவனித்துக்கொள்ளும் முடிவில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.