நண்பனை கரம் பிடிக்கின்றார் கீர்த்தி சுரேஷ்! டிசம்பரில் திருமணம்….

நண்பனை கரம் பிடிக்கின்றார் கீர்த்தி சுரேஷ்! டிசம்பரில் திருமணம்….
  • PublishedNovember 19, 2024

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் பற்றிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தி சுரேஷ் பின் இளம் வயது வரை சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். இதனையடுத்து 2016ம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின்னர் விஜய், சூர்யா, ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமானார்.

ஆண்டனி தட்டில் என்ற தனது நீண்ட நாள் காதலரை கரம் பிடிக்க உள்ளார் கீர்த்தி சுரேஷ். கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த ஆண்டனி, தற்போது துபாயில் வசித்து தொழில் செய்து வருகிறார். இவருடன் கீர்த்தி தனது பள்ளிப் பருவத்தில் இருந்தே சுமார் 15 வருடங்களாக காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வருகின்ற டிசம்பர் 11 அல்லது 12 ஆகிய தேதிகளில் கோவாவில் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *