சர்ச்சைக்கு மத்தியில் பாடகி கெனிஷா முதன் முறையாக போட்ட அதிரடி பதிவு…

சர்ச்சைக்கு மத்தியில் பாடகி கெனிஷா முதன் முறையாக போட்ட அதிரடி பதிவு…
  • PublishedMay 19, 2025

பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் நடிகர் ரவி மோகனுடன் பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்தது இணையத்தில் வைரலானது.

இதற்கு ரவி மோகனின் மனைவியான ஆர்த்தி ரவி ஆதங்கம் தெரிவிக்கும் வகையில் அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

இதையடுத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து, கெனிஷா தனது வாழ்க்கை துணை என நடிகர் ரவி மோகன் தெரிவித்தார்.

மேலும், தனது மனைவி ஆர்த்தி குறித்தும், மாமியார் சுஜாதா விஜயகுமார் குறித்தும் பல விமர்சனங்களை அவர் முன்வைத்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, ரவி மோகனின் மாமியாரும், பட தயாரிப்பாளருமான சுஜாதாவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இப்படி இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டு முன்வைத்து வரும் நிலையில், பாடகி கெனிஷா மீதும் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்தநிலையில், பாடகி கெனிஷா சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில், “எல்லா இரைச்சல்களுக்கு மத்தியிலும், நம்பிக்கையில் ஒரு அமைதி நிலவுகிறது; என் ஆன்மாவுக்குள் தனிமையும் ஒரு அமைதியான போராட்டமும் நடக்கிறது.

என் மீது நீங்கள் குச்சிகளும் கற்களும் வீசினாலும் அது என்னை காயப்படுத்தாது. நான் அதிலிருந்து மீண்டு வந்துவிடுவேன்.

நான் இசையைப் பற்றிக்கொள்ள விரும்புகிறேன், தழும்புகளை ஞானமாக மாற்றுகிறேன்.நாளைய விடியல்கள் மற்றும் புதிய தொடக்கங்களுக்கு ஆழமான துயரங்களிலிருந்து, என் ஆன்மா பாடுகிறது” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *