கவினின் Kiss படத்திற்கு வந்த பரிதாப நிலை : வசூலில் பெரும் அடி

கவினின் Kiss படத்திற்கு வந்த பரிதாப நிலை : வசூலில் பெரும் அடி
  • PublishedSeptember 20, 2025

“கிஸ்” ஒரு ரொமான்டிக் காமெடி திரைப்படம். இதில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளனர். நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

ஒரு புத்தகத்தின் மூலம் காதலர்கள் முத்தம் கொடுத்தால் அவர்களின் எதிர்காலத்தை அறியும் சக்தியைப் பெறுகிறார் கவின். காதல் பிடிக்காத அவர், அந்த சக்தியை வைத்து காதலர்களை பிரிக்கிறார்.

ஆனால், ப்ரீத்தியை சந்தித்த பிறகு அவர் மனதில் மாற்றம் ஏற்படுகிறது. அவரை சந்தித்த பின் என்ன ஆனது என்பது தான் இந்த படத்தின் கதை.

விமர்சனங்களைப் பொறுத்தவரை, படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. சிலருக்கு கவின் மற்றும் ப்ரீத்தியின் நடிப்பு பாராட்டப்படுகிறது. குறிப்பாக, லிப் கிஸ் காட்சி பேசப்படும்.

ஆனால், திரைக்கதை சுவாரசியமாக இல்லை என்றும், முதல் பாதி மெதுவாக நகர்வதாகவும் விமர்சனங்கள் வந்துள்ளன. கிளைமாக்ஸ் சிஜி காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில், “கிஸ்” திரைப்படம் இளைஞர்களுக்கு ஒரு ஜாலியான படமாக இருக்கும். பேண்டசி பின்னணியில் உருவாகி உள்ள ரொமாண்டிக் காமெடி கதை தான் இந்த கிஸ்.

கிஸ் திரைப்படம் கவினுக்கு கம்பேக் படமாக அமையுமா என்கிற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஏனெனில் கிஸ் படத்திற்கு முன்னதாக கவின் நடிப்பில் வெளிவந்த ஸ்டார் மற்றும் ப்ளெடி பெக்கர் ஆகிய இரண்டு படங்களும் சொதப்பலாக அமைந்தன.

அதில் ஸ்டார் படம் வசூலில் தப்பித்துவிட்டது. ஆனால் ப்ளெடி பெக்கர் படுதோல்வியை சந்தித்ததோடு, அப்படத்தை தயாரித்த இயக்குனர் நெல்சனுக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்தது.

அதே நிலைமை தான் கிஸ் படத்திற்கும் வரும் என தோன்றுகிறது. ஏனெனில் இப்படத்தின் முதல் நாள் வசூல் படுமோசமாக உள்ளது. கிஸ் படம் முதல் நாளில் இந்தியாவில் வெறும் 40 லட்சம் மட்டுமே வசூலித்திருக்கிறது. அதிலும் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் 18 லட்சம் தான் வசூல் செய்துள்ளது.

இது கவினின் முந்தைய படமான ப்ளெடி பெக்கர் மற்றும் ஸ்டார் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் மிகக்குறைவு, ப்ளெடி பெக்கர் முதல் நாளில் 2.8 கோடி வசூலித்திருந்தது. ஸ்டார் படம் முதல்நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 4 கோடி வசூலித்திருந்தது. அதோடு ஒப்பிடுகையில், கிஸ் படுமோசமான வசூலை பெற்றிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *