போடுடா வெடிய… STR – 48 படத்தின் ஹீரோயின்கள் யார் தெரியுமா?

போடுடா வெடிய… STR – 48 படத்தின் ஹீரோயின்கள் யார் தெரியுமா?
  • PublishedMay 21, 2024

நடிகர் சிம்பு -தேசிங்கு பெரியசாமி கூட்டணியில் உருவாகும் எஸ்டிஆர் 48 படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டிலேயே துவங்கவுள்ளதாக கூறப்பட்ட சூழலில், படத்தின் சூட்டிங் குறித்த எந்தவிதமான அப்டேட்டும் அறிவிக்கப்படாமல் உள்ளது,

இதனிடையே இந்த படத்திற்காக நீண்ட காலங்களாக காத்திருந்த சிம்பு தற்போது கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அதன் பின்பே, எஸ்டிஆர் 48 படத்தில் சிம்பு இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகவுள்ள எஸ்டிஆர் 48 படம் வரலாற்று பின்புலத்தில் உருவாக உள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இணையவுள்ள நாயகிகள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

படம் சர்வதேச அளவில் ரசிகர்களை கவரும் வகையில் உருவாகவுள்ள சூழலில், இந்த படத்தில் பாலிவுட் நாயகிகள் கியாரா அத்வானி மற்றும் ஜான்வி கபூர் சிம்புவிற்கு ஜோடியாக இணையவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ஜான்வி கபூர், அடுத்ததாக தமிழில் இணையவுள்ளதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. அவர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடித்துவரும் சூழலில், தமிழில் அவர் சிம்புவிற்கு ஜோடியாக உள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விஷயமாகவே அமைந்துள்ளது.

படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் தொடர்ந்து காத்திருக்கும் சூழலில் விரைவில் சூட்டிங் அப்டேட்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *