குபேராவில் ராஷ்மிகாவின் சிறப்பு விடியோ வெளியானது…

குபேராவில் ராஷ்மிகாவின் சிறப்பு விடியோ வெளியானது…
  • PublishedJuly 5, 2024

நடிகர் தனுஷின் 50ஆவது படமான ராயன் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்த நிலையில் தனுஷின் – 51வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார்.

இதில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ராஷ்மிகா நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பான் இந்தியப் படமாக உருவாகும் இப்படத்திற்குக் குபேரா என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது.

இதில், தனுஷின் சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில், படப்பிடிப்பு நிறைவடையும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகாவிம் முதல் பார்வை போஸ்டர் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

https://x.com/iamRashmika/status/1809120540331782338

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *