பாக்ஸ் ஆபிஸில் கோடிகளை குவிக்கும் ”குடும்பஸ்தன்”
கவின், ஹரிஷ் கல்யாணுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளவர் மணிகண்டன்.
தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த மணிகண்டனின் ஹிட் லிஸ்ட்டில் லேட்டஸ்டாக இணைந்துள்ள திரைப்படம் குடும்பஸ்தன். இப்படம் கடந்த ஜனவரி 24ந் தேதி திரைக்கு வந்தது.
குடும்பஸ்தன் திரைப்படத்தை ராஜேஸ்வர் காளிசாமி இயக்கி இருந்தார். இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக சான்வி மேக்னா என்கிற புதுமுக நடிகை நடித்துள்ளார்.
குடும்பஸ்தன் திரைப்படம் குடியரசு தின விடுமுறையை ஒட்டி திரையரங்குகளில ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் ஹீரோவாக ஹாட்ரிக் வெற்றியை ருசித்துள்ளார் மணிகண்டன்.
இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால், திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வருகிறது. இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக முதல் நாளை விட இரண்டாம் நாளில் இப்படம் டபுள் மடங்கு வசூலித்துள்ளது.
அதன்படி குடும்பஸ்தன் திரைப்படம் முதல் நாளில் ரூ.1.4 கோடி வசூலித்திருந்த நிலையில், இரண்டாம் நாளில் இப்படம் ரூ.2.8 கோடி வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது. இதன்மூலம் தற்போதுவரை இப்படம் ரூ.4.2 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது.
இன்றும் விடுமுறை தினம் என்பதால் குடும்பஸ்தன் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு மதகஜராஜா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் குடும்பஸ்தன் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.