கூலி திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என தகவல்???

கூலி திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என தகவல்???
  • PublishedMarch 17, 2025

ரஜினிகாந்தின் நடிப்பில் தற்போது கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் கூலி.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சௌபின் ஷாஹிர் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளில் இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலானது. இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தனர். ஆனால், தற்போது ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளிவராது என கூறப்படுகிறது.

ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் உருவாகியுள்ள வார் 2 படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் அனில் கபூர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடித்துள்ளனர்.

ரூ. 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்துள்ளது. அதுவும் அவர்களுடைய ஸ்பை யூனிவெர்சில் இப்படத்தை கொண்டு வந்துள்ளனர். வார் 2 திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், கூலி திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என தகவல் வெளியாகியுள்ளது.

கூலி படத்தை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் இது சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *