கும்கி – 2 டீசர் வெளியானது : வெளியீட்டுத் திகதியும் அறிவிப்பு

கும்கி – 2 டீசர் வெளியானது : வெளியீட்டுத் திகதியும் அறிவிப்பு
  • PublishedOctober 18, 2025

பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான கும்கி பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது கும்கி 2 ரெடியாகி விட்டது.

பிரபு சாலமன்- சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து ‘கும்கி 2’ படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.

‘கும்கி 2’ படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், கும்கி 2 படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கும்கி 2 படம் வரும் நவம்பர் 14ம் திகதி வெளியாகிறது. விஜய் சேதுபதி டீசருடன், வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

https://www.youtube.com/watch?v=l4OjEXIV7D4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *