பொன்னியின் செல்வன் வசூலால் லைக்காவிற்கு ஏற்பட்ட சிக்கல்!

பொன்னியின் செல்வன் வசூலால் லைக்காவிற்கு ஏற்பட்ட சிக்கல்!
  • PublishedMay 16, 2023

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வசூல் தயாரிப்பு நிறுவனமான லைக்காவை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் மாபெரும் வசூலை அள்ளிய பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை மணிரத்தினத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இப்போது அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். அதாவது சட்ட விரோத பரிவர்த்தனை,  வருமான வரி ஏய்ப்பு ஆகியவை லைக்கா நிறுவனம் செய்திருப்பதாக சந்தேகப்பட்டு தற்போது சோதனையை நடத்தி வருகிறார்கள்.

அதன்படி சென்னை தியாகராய நகர்,  காரப்பாக்கம்,  அடையார் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.

மேலும் கோலிவுட்டில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் லைக்கா நிறுவனத்தில் சோதனை நடத்துவது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கான காரணம் என்னவென்றால் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படம் அதிக வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளதால் அதற்கான சோதனையை நடத்தி வருகிறார்கள். இதனால் லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன் மிகுந்த பதட்டத்தில் உள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *