சீரியல் நடிகை என ஒதுக்கிய முன்னணி நடிகர்கள் : தேடி வரவைத்த வாணிபோஜன்!

சீரியல் நடிகை என ஒதுக்கிய முன்னணி நடிகர்கள் : தேடி வரவைத்த வாணிபோஜன்!
  • PublishedJuly 19, 2023

தெய்வமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிய வாணிபோஜன் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தார்.  பரத்துடன் இவர் இணைந்து நடித்திருக்கும் லவ் திரைப்படம் வரும் 28 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இவரை சீரியல் நடிகை என சில ஹீரோக்கள் ஒதுக்கி வைத்த சம்பவத்தை அவர் ஒரு பேட்டியில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அதாவது ஆரம்பத்தில் பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நேரத்தில் அந்த வாய்ப்புகள் எல்லாம் கைநழுவி போனதாம்.

சொக்கவைக்கும் கவர்ச்சியில் வாணி போஜன்.. வைரலாகும் போட்டோவால் ஸ்தம்பித்த  இணையதளம்! - Cinemapettai

இதற்கு முக்கிய காரணம் இவர் சின்னத்திரை நடிகை என்பதுதான். அதனாலேயே பல முன்னணி ஹீரோக்கள் இவருடன் நடித்தால் தங்கள் கௌரவம் என்ன ஆகும் என்ற நினைப்பில் கடைசி நேரத்தில் அவரை வேண்டாம் என்று கழட்டி விட்டிருக்கிறார்கள்.

இதனால் நொந்து போன வாணி போஜன் பொறுமையாக காத்திருந்து தனக்கான வாய்ப்புகளை பெற்றிருக்கிறார். அப்படி நடிக்க ஆரம்பித்த அவர் விக்ரம் பிரபு, ஜெய்,  பரத் ஆகிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்தார். அதிலும் மகான் படத்தில் இவர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தது பலரையும் வியக்க வைத்தது.

ஆனால் அவருடைய காட்சிகள் படத்தில் வரவில்லை என்றாலும் விக்ரமுடன் நடித்தது இவருக்கு பப்ளிசிட்டியை தான் கொடுத்தது. இப்படி சிறிது சிறிதாக முன்னேறிய இவருக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அப்போது இவரை உதாசீனப்படுத்திய சில ஹீரோக்களின் பட வாய்ப்புகளும் வந்துள்ளதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *