கவுண்டமணியை ஒதுக்கிய முன்னணி நட்சத்திரங்கள் : ஆனால் சுற்றி அடித்த கர்மா!

கவுண்டமணியை ஒதுக்கிய முன்னணி நட்சத்திரங்கள் : ஆனால் சுற்றி அடித்த கர்மா!
  • PublishedJuly 2, 2023

ஒரு காலகட்டத்தில் கவுண்டமணி படங்கள் இல்லாமல் தமிழ் சினிமாவே இல்லை என்ற நிலைமை இருந்தது. அதுமட்டுமின்றி ரஜினி,  கமல் போன்ற ஹீரோக்களை வளர்த்து விட்டதில் கவுண்டமணிக்கும் பங்கு உண்டு.

இந்நிலையில்,ஆரம்பகாலத்தில் அனைவரும் ஒன்றாக பணிப்புரியும்போது கவுண்டமணி முன்னணி நடிகர்களான கமல், மற்றும் ரஜினியை வாட,போடா என கதைப்பாராம்.

ஆனால் பிற்காலத்தில் அவ்விரு நடிகர்களும் முன்னணி நடிகர்களாக உயர்ந்த நிலையில்.  அப்போதும் கவுண்டமணி படப்பிடிப்பு தளத்தில் ரஜினி மற்றும் கமலை வாடா போடா என்று அழைத்தாராம்.

இதனால் இவர்கள் இனி தங்களது படத்தில் கவுண்டமணி நடிக்க கூடாது என்று கூறியுள்ளனர். அப்படியும் நடித்தால் அவருக்கென்று தனி ட்ராக் வையுங்கள்.

ஹீரோ உடன் காம்பினேஷன் வேண்டாம் என்று கூறியிருக்கின்றனர். அப்போது தான் கவுண்டமணி மற்றும் செந்தில் காம்பினேஷனில் படங்கள் வெளியாக தொடங்கியது.

அப்போது இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்தால் படம் 90 வீதம்  ஹிட் என்று தயாரிப்பாளர்கள் நம்ப ஆரம்பித்தனர். ஆகையால் ரஜினி மற்றும் கமல் படங்களில் இவர்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் வற்புறுத்த ஆரம்பித்தனர்.

அதன்பிறகு வேறு வழியில்லாமல் மீண்டும் தங்களது படங்களில் கவுண்டமணியை நடிக்க வைக்க டாப் ஹீரோக்கள் சம்மதித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *