ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்த லியோ… சிங்கம் இறங்கினா காட்டுக்கே விருந்துதான்….

ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்த லியோ… சிங்கம் இறங்கினா காட்டுக்கே விருந்துதான்….
  • PublishedOctober 15, 2023

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் அடுத்து புதிய சாதனை படைக்க வருகிறது விஜய்யின் லியோ.

லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைப்பில் Seven Screen Studio தயாரித்துள்ள இந்த லியோ படத்தின் மூலம் பல வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்கள் விஜய் மற்றும் த்ரிஷா.

வரும் அக்டோபர் 19ம் தேதி படம் ரிலீஸை நெருங்கி வர பாடல்கள், டிரைலர் என படம் குறித்து வீடியோக்கள் வெளியாக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

படக்குழுவினர் சிலரும் லியோ படம் குறித்து பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள்.

வெளிநாடுகளில் எல்லாம் எப்போதோ படத்தின் புக்கிங் தொடங்கப்பட்டுவிட்டது. நேற்று ஒரு நாளில் மட்டுமே Book My Showவில் இந்தியாவில் மட்டுமே 1.2 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாம்.

இதேவேளை, கேரளா முன்பதிவுக்குப் பிறகு புக்மைஷோவில் காலை 10 மணி முதல் 11 மணி வரை 83,000+ டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.

மேலும், Book My Showவில் 60 நிமிடத்தில் 80,000க்கும் மேற்பட்ட டிக்கட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *