திருப்தியில்லாத லோகேஷ்… லியோ புத்தகத்தையும் வெளியிட்டார்

திருப்தியில்லாத லோகேஷ்… லியோ புத்தகத்தையும் வெளியிட்டார்
  • PublishedJanuary 7, 2024

விஜய் – லோகேஷ் கூட்டணியில் கடந்தாண்டு வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஒருகட்டத்தில் லோகேஷே லியோ இரண்டாம் பாதி திரைக்கதை சரியாக வரவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். இந்நிலையில், லியோ படத்தின் திரைக்கதையை புத்தகமாக வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

சென்னையில் தொடங்கிய 47வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் லியோ திரைக்கதை புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோல், கைதி, மாஸ்டர் படங்களின் திரைக்கதை புத்தகமும் சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனையாகி வருகிறது.

இதனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். லியோ திரைக்கதை சரியாக வரவில்லை என லோகேஷே ஒப்புக் கொண்டார். அப்படியிருந்தும் லியோ திரைக்கதை என புத்தகம் வெளியாகியுள்ளது பெரிய மோசடி என விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *